/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பசுமை பந்தல் அமைப்புவாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
/
பசுமை பந்தல் அமைப்புவாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 01, 2025 01:54 AM
பசுமை பந்தல் அமைப்புவாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
நாமக்கல்:நாமக்கல் நகரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முக்கிய சாலைகளில் ஆங்காங்கே சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து சிக்னலின் போது நீண்ட நேரம் வெயிலில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. அப்போது குழந்தைகள், வயதானவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், பல்வேறு பணிகளுக்கு செல்வோரும்
சோர்வடைந்து விடுகின்றனர்.இந்நிலையில், கோடைகாலம் முடியும் வரை, நாமக்கல் மாநகராட்சி பகுதி
யில் உள்ள முக்கிய, ஏழு போக்குவரத்து சிக்னல்களில், கடந்தாண்டைபோல் தற்போதும், பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என, கடந்த, 21ல் நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, திருச்செங்கோடு சாலை சிக்னல், சேலம் பிரிவு, மோகனுார் சாலை ஆகிய சிக்னல்களில், 'பசுமை பந்தல்' அமைக்கப்பட்டுள்ளது. மேலும், டி.பி., பாய்ன்ட், கோட்டை சாலை பிரிவு, துறையூர் சாலை பிரிவு உள்ளிட்ட போக்குவரத்து சிக்னல்களில், 'பசுமை பந்தல்' அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.