/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காஸ் கசிவால் வீட்டில் தீ விபத்து
/
காஸ் கசிவால் வீட்டில் தீ விபத்து
ADDED : ஏப் 03, 2025 01:32 AM
காஸ் கசிவால் வீட்டில் தீ விபத்து
பள்ளிப்பாளையம்:திருச்செங்கோடு சாலை முனியப்பன் நகரை சேர்ந்தவர் தேவராஜ், 45; இவரது மனைவி கவிதா. இவர், நேற்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். சிலிண்டரில் காஸ் தீர்ந்துவிட்டது. இதனால் வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரை எடுத்து மாற்றி உள்ளார். அப்போது காஸ் கசிந்து திடீரென தீப்பிடித்து வீடு முழுவதும் பரவியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்து தப்பினர். இதுகுறித்து, வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், மிக்ஸி, கிரைண்டர், எலக்ட்ரானிக் பொருட்கள், பாத்திரங்கள், துணிகள் என, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. இதுகுறித்து, பள்ளிப்பாளையம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.