தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தேர் திருவிழாவை முன்னிட்டுபுதுப்பட்டியில் முகாம் நீதிமன்றம்

தேர் திருவிழாவை முன்னிட்டுபுதுப்பட்டியில் முகாம் நீதிமன்றம்

தேர் திருவிழாவை முன்னிட்டுபுதுப்பட்டியில் முகாம் நீதிமன்றம்


ADDED : ஏப் 09, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர் திருவிழாவை முன்னிட்டுபுதுப்பட்டியில் முகாம் நீதிமன்றம்

நாமகிரிப்பேட்டை:ராசிபுரம், புதுப்பட்டியில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்வது வழக்கம். இதற்காக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, பதிவு செய்யும் வழக்குகளை உடனுக்குடன் விசாரிக்க, குற்றவியல் நீதிமன்றமும், இரண்டு நாட்கள் நடக்கிறது.

இந்தாண்டுக்கான தேர் திருவிழா, கடந்த மாதம், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா, இன்று நடக்கிறது. முன்னதாக உற்சவர் சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக வடுகம், மலையாம்பட்டி வழியாக புதுப்பட்டி வந்து சேர்ந்தது.

விழா தொடங்கியுள்ள நிலையில், மாரியம்மன் கோவில் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் முகாம் நீதிமன்றம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை நீதித்துறையினர் செய்து வருகின்றனர். புறக்காவல் நிலையத்தில் பதியப்படும் வழக்குகள் மட்டுமின்றி, ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்குகளும் இரண்டு நாட்கள் இங்கு விசாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us