/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் தேரோட்டம்: கிராம மக்கள் உற்சாகம்
/
கோவில் தேரோட்டம்: கிராம மக்கள் உற்சாகம்
ADDED : ஏப் 11, 2025 01:44 AM
கோவில் தேரோட்டம்: கிராம மக்கள் உற்சாகம்
ராசிபுரம்:ராசிபுரம் அருகே, கண்ணுார்பட்டியில் நடந்த கோவில் தேர் திருவிழாவில், கிராம மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ராசிபுரம் அடுத்த கண்ணுார்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு
தோறும், பங்குனி மாதம் இங்கு தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்திருவிழா கடந்த வாரம் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று அலகு குத்துதல், அக்னி சட்டி எடுப்பது, பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில் கம்பம் நட்டவுடன் கண்ணுார் பட்டியை சுற்றியுள்ள நாராயண கவுண்டம்பாளையம், சின்னாகவுண்டனுார், பொடங்கம், கோவிந்தம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 8 கிராமங்களில் அசைவம் சமைக்க மாட்டார்கள். அனைத்து குடும்பத்தினரும் சைவத்திற்கு மாறிவிடுவது வழக்கம். அதேபோல், கண்ணுார்பட்டி மாரியம்மன் கோவிலை சுற்றியுள்ள வீடுகளில், 15 நாட்களுக்கு வடசட்டியில் குழம்பு தாளிக்க மாட்டார்கள். இந்த விரதம் நேற்று முடிந்து அனைவரது வீட்டிலும் அசைவம் சமைத்தனர்.
நேற்று மாலை தேர் திருவிழா நடந்தது. இதில் சுற்று வட்டார கிராம மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேரில் உலா வந்த அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

