தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா

முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா

முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா


ADDED : ஏப் 12, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மோகனுார், பங்குனி உத்திரத்தையொட்டி, மாவட்ட முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மோகனுார், பாலப்பட்டியில், கதிர்மலை முருகன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திரம், 4-ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், தீர்த்தவாரி பூஜை, மகா அபிஷேகம், வள்ளி தேவசேனா திருக்கல்யாண உற்சவம், சுவாமி மயில்வாகன அலங்காரம், ஊஞ்சல் சேவை உட்பட பல்வேறு விசேஷ பூஜைகள் நடந்தன. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், நாமக்கல்-மோகனுார் சாலை, காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி, மோகனுார்-நாமக்கல் சாலையில், காந்தமலை, பாலதண்டாயுதபாணி, நாமக்கல்-சேலம் பைபாஸ் சாலை, கருங்கல்பாளைம் தண்டாயுதபாணி கோவில், ப.வேலுார் அருகே நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவில், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில், 34.5 அடி உயரமுள்ள ஆறுமுக கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மேலும், ப.வேலுார் தெற்கு நல்லியாம்பாளையத்தில் உள்ள முருகன், பொத்தனுார் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி, கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பள்ளிப்பாளையம் சந்தைப்பேட்டை பகுதி காவிரி ஆற்றோரம் அமைந்துள்ள பாலசுப்ரமணியர் கோவில், வெண்ணந்துார் அருகே, கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவில், குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன், சேந்தமங்கலம் அருகே, தத்தகிரி முருகன் கோவில், கொல்லிமலையில் உள்ள அரப்பளீஸ்வரர் கோவிலில், முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us