/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 04, 2025 01:42 AM
நாமக்கல், மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாமக்கல்லில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல், பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதேஸ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பேச்சியம்மாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், தொடக்கக்கல்வித்துறையில் கண் துடைப்பாக, 2025--26-ம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை அறிவித்து விட்டு, மாநிலம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக சட்டவிரோதமாக மாறுதல் ஆணைகளை வழங்கி வரும், தொடக்கக்கல்வி துறையை கண்டிப்பது.
முறைகேடாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், 2025--26-ம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி துறையில் பணி ஓய்வுபெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு விதிகளின்படி பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், பொருளாளர் மலர்விழி உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கத்தினர், ஆசிரியர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.