தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஹோட்டல்களில் அதிகாரிகள் சோதனைசுகாதாரமற்ற கடைகளுக்கு அபராதம்

ஹோட்டல்களில் அதிகாரிகள் சோதனைசுகாதாரமற்ற கடைகளுக்கு அபராதம்

ஹோட்டல்களில் அதிகாரிகள் சோதனைசுகாதாரமற்ற கடைகளுக்கு அபராதம்


ADDED : மே 15, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமகிரிப்பேட்டை::நாமகிரிப்பேட்டையில் உள்ள ஹோட்டல்கள், இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நாமகிரிப்பேட்டை உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில், அதிகாரிகள் நேற்று நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, 8 ஹோட்டல்கள் மற்றும் கோழி இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர். கடைகளில் சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறதா மற்றும் உணவு விடுதிகள் துாய்மையாக பராமரிக்கப்படுகின்றனவா என அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பல்வேறு கடைகள் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சில கடைகள் உணவு பாதுகாப்பு துறையின் லைசென்ஸ் பெறாமல், சட்டவிரோதமாக செயல்பட்டதும் தெரியவந்தது. குறிப்பாக ஒரு கடையில், உடைந்த முட்டைகளை சமையலுக்கு பயன்படுத்தியது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை

தந்தது.இதையடுத்து, சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய், லைசென்ஸ் இன்றி இயங்கிய கடைகளுக்கு , 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம், 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us