ADDED : மே 22, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்: குமாரபாளையம் காவிரி ஆற்றில், மூதாட்டி சடலத்தை போலீசார் மீட்டனர்.குமாரபாளையம் கலைமகள் தெரு, நகராட்சி மண்டபம் பின்புறம் உள்ள காவிரி ஆற்றில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் மூதாட்டி சடலத்தை மீட்டனர். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆற்றில் அடித்து வரப்பட்டாரா ? இறந்தவர் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
