'குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நாய்களுக்கு உணவளிக்கணும்
'குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நாய்களுக்கு உணவளிக்கணும்
ADDED : ஜூன் 25, 2026 03:56 AM
குமாரபாளையம்:குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் வெளியிட்ட அறிக்கை:
நகராட்சி
பகுதிகளில் உள்ள தெரு நாய்களுக்கு உணவளிக்க விருப்பம் உள்ளவர்கள்
மற்றும் தன்னார்வலர்கள் கீழ்கண்ட பட்டியலில் உள்ள இடங்களில்
மட்டுமே தெரு நாய்களுக்கு உணவளிக்க ஏதுவாக, இடங்கள் தேர்வு
செய்யப்பட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தெரு நாய்களுக்கு
உணவளிக்க விருப்பம் உள்ளவர்கள், கீழ்கண்ட இடங்களில் உணவளிக்க
கேட்டுகொள்ளப்படுகின்றனர். அதன்படி, பூசாரிக்காடு, சக்தி
விநாயகா பள்ளி பின்புறம், செந்துார் கார்டன் அருகில், மேட்டுக்காடு,
குள்ளங்காடு, சாரதா படித்துறை, பத்திரத்துறை, ஐயப்பா படித்துறை,
பாளிக்காடு, கம்பன் நகர், எருமைகட்டுத்துறை, சரஸ்வதி தியேட்டர் ரோடு,
சுந்தரம் காலனி கழிவறை அருகில், மாரக்காள்காடு, சிவசக்தி நகர்,
ஆஞ்சநேயர் கோவில் பின்புறம், மணிமேகலை தெரு, எஸ்.எஸ்.எம்., பள்ளி
அருகே, தீயணைப்புத்துறை ஆகிய இடங்கள், தெரு நாய்களுக்கு உணவளிக்கும்
இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
