/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புத்தக திருவிழா துவக்கம் 10 நாட்களுக்கு கோலாகலம்
/
புத்தக திருவிழா துவக்கம் 10 நாட்களுக்கு கோலாகலம்
ADDED : பிப் 01, 2025 12:48 AM
புத்தக திருவிழா துவக்கம் 10 நாட்களுக்கு கோலாகலம்
நாமக்கல்: தமிழக அரசு சார்பில், நாமக்கல் புத்தக திருவிழா இன்று துவங்கி, பத்து நாட்கள் நடக்கிறது.நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, நுாலகத்துறை சார்பில், 'நாமக்கல் புத்தக திருவிழா', நாமக்கல்-பரமத்தி சாலை கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி, 10 வரை, மொத்தம், 10 நாட்கள் நடக்கிறது.
தினமும் காலை, 10:00 முதல், இரவு, 9:00 வரை இந்த புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில், 80க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தினமும் மாலை தலைச்சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக திருவிழாவில் புத்தகங்கள் வாங்குவோருக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இன்று மாலை, 6:00 மணிக்கு விழா துவங்குகிறது. கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், புத்தக திருவிழாவை துவக்கி வைத்து பேசுகிறார். டி.ஆர்.ஓ., சுமன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.