/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரத்து குறைவால் செங்கரும்புஜோடி ரூ.100, 80க்கு விற்பனை
/
வரத்து குறைவால் செங்கரும்புஜோடி ரூ.100, 80க்கு விற்பனை
வரத்து குறைவால் செங்கரும்புஜோடி ரூ.100, 80க்கு விற்பனை
வரத்து குறைவால் செங்கரும்புஜோடி ரூ.100, 80க்கு விற்பனை
ADDED : ஜன 12, 2025 01:16 AM
வரத்து குறைவால் செங்கரும்புஜோடி ரூ.100, 80க்கு விற்பனை
நாமக்கல்,: பொங்கல் பண்டிகையையொட்டி வரத்து குறைந்ததால், ஒரு ஜோடி செங்கரும்பு, 100 ரூபாய், 80 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகை, தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி, நாமக்கல் மாநகராட்சி அருகே உள்ள வாரச்சந்தையில், கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை அதிகரித்துள்ளது. நாளை போகி பண்டிகை, 14ல் சூரியன் பொங்கல், 15ல் மாட்டு பொங்கல், 16ல் காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. நாமக்கல் மாநகராட்சி பகுதியில், மோகனுார் சாலை, கோட்டை சாலை, வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில், விற்பனைக்காக கரும்பு, மஞ்சள் கொத்து அதிகளவில் தருவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜோடி செங்கரும்பு, 100 ரூபாய், 80 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை மக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். உற்பத்தி குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:சேலம் மாவட்டம், இடைப்பாடியில் இருந்து கரும்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்புக்கு, அரசு அதிகளவில் கரும்பை கொள்முதல் செய்துள்ளதால், தேவை அதிகரித்துள்ளது. இதனால் விலை உயர்ந்து, ஒரு ஜோடி கரும்பு, 100 ரூபாய், 80 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.