/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரும் 14, 16ல் தேங்காய் ஏலம் ரத்து
/
வரும் 14, 16ல் தேங்காய் ஏலம் ரத்து
ADDED : ஜன 11, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் 14, 16ல் தேங்காய் ஏலம் ரத்து
ப.வேலுார் :ப.வேலுார் அருகே, வெங்கமேடு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலமும், வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலமும் நடக்கிறது.
இந்த ஏலத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொள்கின்றனர்.
வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு விடுமுறை நாட்களான, வரும், 14ல் தேங்காய் ஏலம், 16ல் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுவது ரத்து செய்யப்படு
கிறது என, வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

