/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாவட்ட போலீஸ் சார்பில்வரும் 17ல் வாகனங்கள் பொது ஏலம்
/
நாமக்கல் மாவட்ட போலீஸ் சார்பில்வரும் 17ல் வாகனங்கள் பொது ஏலம்
நாமக்கல் மாவட்ட போலீஸ் சார்பில்வரும் 17ல் வாகனங்கள் பொது ஏலம்
நாமக்கல் மாவட்ட போலீஸ் சார்பில்வரும் 17ல் வாகனங்கள் பொது ஏலம்
ADDED : ஏப் 15, 2025 01:59 AM
நாமக்கல் மாவட்ட போலீஸ் சார்பில்வரும் 17ல் வாகனங்கள் பொது ஏலம்
நாமக்கல்:'நாமக்கல் மாவட்ட போலீஸ் துறை சார்பில், வரும், 17ல், 23 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது' என, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு மற்றும் போலீஸ் நிலையங்களில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில், 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், நாமக்கல் மாவட்ட போலீசாரால் பயன்படுத்தப்பட்டு பின் கழிவு செய்யப்பட்ட, 11 வாகனங்கள் என, மொத்தம், 23 வாகனங்கள், ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. வரும், 17 காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்.
வாகனங்களை பார்வையிட விரும்புபவர்கள், நாளை (ஏப்., 16), காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் நேரில் பார்வையிடலாம்.
வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக, 5,000 ரூபாய், 17ல், காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். முன் தொகை செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், முழு ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி., வரி செலுத்தி வாகனங்களை உடனே பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலம் எடுக்காதவர்கள் செலுத்திய முன் பணத்தை, ஏலம் முடிந்த பின் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.