/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விதிமுறைகளை மீறிமது விற்ற 17 பேர் கைது
/
விதிமுறைகளை மீறிமது விற்ற 17 பேர் கைது
ADDED : ஜன 17, 2025 01:15 AM
விதிமுறைகளை மீறிமது விற்ற 17 பேர் கைது
நாமக்கல்: திருவள்ளுவர் தினத்தில், நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி மது விற்ற, 17 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 701 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு இருந்தது. அரசின் உத்தரவை மீறி, மது விற்பனை செய்தால் கடும் நட
வடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து போலீஸ்
எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் உத்தரவின்படி, மதுவிலக்கு போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பெட்டி கடைகள் மற்றும் சந்து பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில், 17 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 701 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.