/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் அறிவுசார் மையத்திற்கு 2 கணினியை எம்.பி., வழங்கல்
/
மோகனுார் அறிவுசார் மையத்திற்கு 2 கணினியை எம்.பி., வழங்கல்
மோகனுார் அறிவுசார் மையத்திற்கு 2 கணினியை எம்.பி., வழங்கல்
மோகனுார் அறிவுசார் மையத்திற்கு 2 கணினியை எம்.பி., வழங்கல்
ADDED : பிப் 12, 2025 01:13 AM
மோகனுார் அறிவுசார் மையத்திற்கு 2 கணினியை எம்.பி., வழங்கல்
மோகனுார்:மோகனுார் டவுன் பஞ்சாயத்து, வாங்கல் பிரிவு சாலையில், நுாலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திற்கு, எம்.பி., மாதேஸ்வரன், தொகுதி மேம்பாட்டு நிதி, 1.06 லட்சம் ரூபாயில், இரண்டு கணினிகளை வழங்கினார். அவர் பேசுகையில், ''அரசு வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில், கிராமப்புற மாணவ, மாணவியர் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன், அறிவுசார் மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அவற்றை, மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,''
என்றார்.டவுன் பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், செயல் அலுவலர் கலைராணி, அட்மா தலைவர் நவலடி, கவுன்சிலர் செல்லவேல், கொ.ம.தே.க., மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.