ADDED : பிப் 18, 2025 01:33 AM
அ நிறம் | அளவு
மின் மாற்றிக்கு தீ ரூ.3 லட்சம் சேதம்
குமாரபாளையம்:குமாரபாளையம் மின்வாரிய உதவி பொறியாளர் முருகானந்தம், போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: குமாரபாளையம், ஆனங்கூர் சாலையில் உள்ள ஆர்.டி., பில்டிங் அருகே, மின்வாரியத்திற்கு சொந்தமான மின்மாற்றி உள்ளது.
இதில், கடந்த, 15 காலை, 5:30 மணிக்கு, மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். இதனால் மின்மாற்றி மற்றும் பில்லர் பாக்ஸ் தீயில் எரிந்து சேதமாகின. இதன் மதிப்பு, 2 லட்சத்து, 15,000 ரூபாயாகும். இதேபோல், சரவணா தியேட்டர் எதிரே வணிக நிறுவனத்திற்கு தீ வைத்தனர். இதனால் மின் மீட்டர், சர்வீஸ் கேபிள்கள் சேதமாகின. மின்வாரிய பொருட்களுக்கு தீ வைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
