/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையத்தில் 3 டூவீலர்கள் திருட்டு
/
குமாரபாளையத்தில் 3 டூவீலர்கள் திருட்டு
ADDED : மார் 04, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் நடராஜா நகர், சுந்தரம் நகர், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் தன்ராஜ், 38, வீரமணி, 37, மோகன்ராஜ், 25; இவர்கள், கடந்த, ௧௩, ௧௮, 25 தேதிகளில், தங்கள் வீட்டின் முன் டூவீலர்களான, இரண்டு, 'பேஷன் புரோ', ஒரு பிளாட்டினா வாகனங்களை, இரவில் நிறுத்தி வைத்திருந்தனர்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, டூவீலர்களை காணவில்லை. இது-குறித்து, மூவரும் அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர் வாகன திருட்டால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், போலீசார் ரோந்து பணி மேற்-கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.