/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நகை திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்்கள் கைது
/
நகை திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்்கள் கைது
ADDED : ஆக 01, 2024 02:01 AM
நாமக்கல்: நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட, திருச்-சியைச் சேர்ந்த, மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்-தனர்.
நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையி-லான போலீசார், நேற்று திருச்சி சாலை மேம்பாலம் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழி-யாக, டூவீலரில் சென்ற, 3 வாலிபர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருச்சி மாவட்டம், தொட்டியத்தை சேர்ந்த சுபாஷ், 27, ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலையை சேர்ந்த முகமது-ரியாஸ், 26, தொட்டியம், பாலசமுத்திரத்தை சேர்ந்த பிரபாகரன், 32, என்பதும், மூவரும் நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்-தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், 15 பவுன் நகை, டூவீலரை பறிமுதல் செய்தனர்.