/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கந்தம்பாளையம் காந்தி மகளிர் கல்லுாரியில்400 மாணவியருக்குபட்டச்சான்று வழங்கல்

ADDED : பிப் 19, 2025 02:17 AM
பட்டசான்று நகல், மகளிர்கல்லூரி
நாமக்கல்:-நாமக்கல், நல்லுார் கந்தம்பாளையத்தில் உள்ள காந்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். இயக்குனர்கள் சிவா, வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை முன்னாள் துணைவேந்தர் முருகேசன், 400க்கும் மேற்பட்ட மாணவியருக்கு பட்டச்சான்று வழங்கி பேசியதாவது:பெண்கள் கல்வி கற்பதால் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. மாறி வரும் உலகில், புதிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இக்காலகட்டத்தில் கிடைக்கும் பல்வேறு வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில் நுட்பங்களை கற்று, ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ராசிபுரம் எஸ்.ஆர்.வி., கல்வி நிறுவனங்கள் இயக்குனர் வஜ்ரவேலு, தமிழக பள்ளிக் கல்வித்துறையில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் திருவருள்செல்வன், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவியர், பெற்றோர் உள்பட பலர் பங்கேற்றனர்.