ADDED : மார் 09, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மது விற்ற 6 பேர் கைது
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் சட்ட விரோத மது விற்பனை இரவு, பகலாக நடந்து வருகிறது. இதனால், 'குடி'மகன்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு பள்ளிப்பாளையம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆவாரங்காடு, காவிரி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மது விற்பனை செய்த சேகர், 39, ஈஸ்வரன், 56, மாது, 30, உள்ளிட்ட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். 1,165 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.