ADDED : ஆக 25, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் யூனியன், மூணுசாவடியில் பழ-மைவாய்ந்த ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. கடந்த, 19ல் இக்கோவிலில் உள்ள விநாயகர், முருகன் சிலை, கோவிலின் பின்-புறம் உள்ள வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் கரு-டாழ்வார் சிலைகள் சேதமடைந்திருந்ன. மேலும், சிலைகளை துணி வைத்து மூடியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக விசாரித்தும் உடைத்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என, நாமக்கல் கிழக்கு மாவட்ட, பா.ஜ., கட்சியின் ஆன்மிக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பிலும், பக்தர்கள் சார்பிலும் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

