/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலையில் கட்டுடன் தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவி: கலெக்டர் ஊக்கம்
/
தலையில் கட்டுடன் தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவி: கலெக்டர் ஊக்கம்
தலையில் கட்டுடன் தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவி: கலெக்டர் ஊக்கம்
தலையில் கட்டுடன் தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவி: கலெக்டர் ஊக்கம்
ADDED : மார் 04, 2025 06:13 AM
நாமக்கல்: தலையில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டு போட்டபடி, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவியை, கலெக்டர் உமா. ஊக்கமளித்து பாராட்டினார்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அடுத்த எரையம்பட்-டியை சேர்ந்தவர் கார்த்திகாஸ்ரீ, 17. இவர், பொம்மைக்குட்டை மேட்டில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் -2 படித்து வருகிறார். இந்த பள்ளிக்கான தேர்வு மையம், செல்லப்பம்பட்டி அரசு மேல்-நிலைப்பள்ளியில் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை, மாணவி கார்த்திகாஸ்ரீ, தலையில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டு போட்டவாறு தேர்வெழுத வந்தார். தலையில் காயத்துடன் வந்ததை கண்ட அங்கிருந்த கல்வித்துறை அதிகாரிகள், அவரை அழைத்துச்சென்று தேர்வு அறையில் அமர வைத்தனர்.
இதற்கிடையே, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்வதற்காக, மாவட்ட கலெக்டர் உமா வந்தார். அப்-போது, தலையில் கட்டுப்போட்டவாறு தேர்வெழுதிய மாணவியை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தன்னம்பிக்கையுடன், தைரியமாக தேர்வு எழுதுமாறு அவரை ஊக்கப்படுத்தினார்.இதுகுறித்து, மாணவியின் தாயாரிடம் கேட்டபோது, ''நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலத்தகராறில், அருகில் வசிக்கும் நபர்கள் மாணவியை கல்லால் தாக்கினர். அதனால் காயம் ஏற்பட்டு, தலையில் கட்டு போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேலக-வுண்டம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்,'' என்றார்.