/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓய்வு மேலாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
/
ஓய்வு மேலாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஓய்வு மேலாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஓய்வு மேலாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ADDED : ஆக 01, 2024 02:03 AM
நாமக்கல்: ஓய்வு பெற்ற மேலாளரிடம், 17 லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்துாரை சேர்ந்தவர் லோகநாதன், 73. தனியார் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சில நாட்களுக்கு முன், இவரது மொபைல் போனுக்கு வந்த அழைப்பில் பேசியவர், மும்பையில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்துள்ளார். தொடர்ந்து, 'உங்க-ளது வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் பேசுவார்கள்' எனக்கூறி விட்டு, போன் அழைப்பை துண்டித்தார்.
சிறிது நேரத்தில் பேசிய மற்றொரு நபர், 'முறைகேடான பணப்ப-ரிமாற்றம் தொடர்பாக, 17 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும்; இல்-லையென்றால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்' என, மிரட்டியுள்ளார். இதற்கு பயந்த லோகநாதன், ஆன்லைன் மூலம், 17 லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளார். அதன்பின், தன்-னிடம் பேசியவர்கள், போலி சி.பி.ஐ., அதிகாரிகள் என தெரிந்து அதிர்ச்சிக்குள்ளானார். இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.