/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பழைய இடத்தில் மருத்துவமனை கேட்டு ஆர்ப்பாட்டம்
/
பழைய இடத்தில் மருத்துவமனை கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 01, 2024 02:02 AM
நாமக்கல்: நாமக்கல் -- மோகனுார் சாலையில், அரசு தலைமை மருத்துவ-மனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, நாமக்கல் --திருச்செங்கோடு சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் பின்-புறம், கடந்த, எட்டு மாதங்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்-பட்டது.
மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக ராசிபுரம் மற்றும் திருச்செங்கோட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டன.
இந்நிலையில், பழைய அரசு மருத்துவமனை கட்டடத்திலேயே மீண்டும் தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, 'தலைமை மருத்துவமனை மீட்புக் குழு'வினர், நேற்று நாமக்கல் பூங்கா சாலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால், 2 பெண்கள் உள்பட, 35 பேர் கைது செய்யப்பட்டு நாமக்கல் நகராட்சி திருமண மண்ட-பத்தில் அடைத்து வைத்தனர்.