/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., முன்னாள் நிர்வாகி நினைவு தினம் அனுசரிப்பு
/
தி.மு.க., முன்னாள் நிர்வாகி நினைவு தினம் அனுசரிப்பு
தி.மு.க., முன்னாள் நிர்வாகி நினைவு தினம் அனுசரிப்பு
தி.மு.க., முன்னாள் நிர்வாகி நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : ஜூலை 06, 2024 05:54 AM
ராசிபுரம் : தி.மு.க., முன்னாள் நிர்வாகி, ராசிபுரத்தை சேர்ந்த கே.ஆர்., (எ) ராமசாமியின், 23ம் ஆண்டு நினைவு நாள், நேற்று அனுசரிக்கப்-பட்டது. ராசிபுரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அலுவலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடந்-தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான, எம்.பி., ராஜேஸ்குமாரின் தாத்தா ராமசாமியின் நினைவு தினத்தில், எம்.பி., மாதேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, நகர செயலாளர் சங்கர் உள்-ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கே.ஆர்., (எ) ராமசாமி, 1968ல் அண்ணாதுரையிடம், சிறந்த கூட்-டுறவு வங்கி தலைவர் விருதும், 1999ல் முன்னாள் முதல்வர் கரு-ணாநிதியிடம், மாநில சிறந்த கூட்டுறவாளர் விருதும், ராசிபுரம் ஒன்றிய தி.மு.க., செயலாளராகவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய தி.மு.க., செயலாளராகவும், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினராகவும், 1962 முதல், 2000 வரை, ராசிபுரம் கூட்டுறவு நில வள வங்கி தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு நில வள வங்கி பெருந்தலைவர் என பல பொறுப்புகளை வகித்தார் என்-பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், ராமசாமியின் உருவ படத்திற்கு, எம்.பி., ராஜேஸ்-குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.