/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குப்பை அள்ளிச்சென்ற டிராக்டர் பழுதால் 'டிராபிக்' படம் பிடித்த நிருபரிடம் செயல் அலுவலர் 'கடுகடு'
/
குப்பை அள்ளிச்சென்ற டிராக்டர் பழுதால் 'டிராபிக்' படம் பிடித்த நிருபரிடம் செயல் அலுவலர் 'கடுகடு'
குப்பை அள்ளிச்சென்ற டிராக்டர் பழுதால் 'டிராபிக்' படம் பிடித்த நிருபரிடம் செயல் அலுவலர் 'கடுகடு'
குப்பை அள்ளிச்சென்ற டிராக்டர் பழுதால் 'டிராபிக்' படம் பிடித்த நிருபரிடம் செயல் அலுவலர் 'கடுகடு'
ADDED : செப் 07, 2024 07:53 AM
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்.,க்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டர், பழுதாகி சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை படம் பிடித்த நிருபரை, ''இதுகுறித்து செய்தி வெளியிடக்கூடாது,'' என, செயல் அலுவலர் அடாவடியாக பேசினார்.
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், செயல் அலுவலராக சோமசுந்தரம் உள்ளனர். ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், குப்பை சேகரிக்கும் பணியில், 3 மேஸ்திரிகள், நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குப்பை அள்ள, 2 டிராக்டர், ஒரு வேன், 10 தள்ளுவண்டிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வாகனங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவை.
இந்நிலையில், நேற்று, ப.வேலுார், சுல்தான்பேட்டை பகுதியில், டிராக்டரில் குப்பையை சேகரித்துக்கொண்டு, பஸ் ஸ்டாண்ட் வழியாக துாய்மை பணியாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென டிராக்டர் பழுதாகி நடுவழியில் நின்றது. போக்குவரத்து மிகுதியான பகுதி என்பதால், டிராக்டர் பழுதாகி நின்றதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வந்த டிராபிக் எஸ்.ஐ., 'உடனடியாக டிராக்டரை அப்புறப்படுத்துமாறு' எச்சரிக்கை விடுத்தார். ஆனால், டிராக்டர் ஸ்டார்ட் ஆகாததால், துாய்மை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து டிராக்டரை தள்ளிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
அப்போது, இதனை நமது நிருபர் படம் எடுத்துக்கொண்டிருந்தார். தகவலறிந்து அங்கு வந்த செயல் அலுவலர் சோமசுந்தரம், படம் எடுத்த நிருபரை பார்த்து, ''போட்டோ எடுக்க கூடாது,'' என, தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து, ''இதுகுறித்து செய்தி வெளியிடக் கூடாது; மீறி வெளியிட்டால், நடப்பதே வேறு; ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்; இனிமேல், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து குறித்து எந்த செய்தியும் வரக்கூடாது,'' என அடாவடியாக பேசினார்.
இதுகுறித்து, சேலம் மண்டல டவுன் பஞ்., உதவி இயக்குனர் குருராஜனிடம் கேட்டபோது, ''அந்த டிராக்டர், 20 ஆண்டுக்கு முன் வாங்கப்பட்டது. ஆண்டுதோறும் வாகனங்களை சர்வீஸ் செய்ய வேண்டும். வாகனத்தை பராமரிக்க கொண்டு செல்லாமல், டவுன் பஞ்., பணியாளர்களே அவ்வப்போது சரி செய்து இயக்கி வந்துள்ளனர். இதனால் தற்போது முழுமையாக பழுதாகி உள்ளது. செயல் அலுவலர் சோமசுந்தரம் பேசியது குறித்து விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.