/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நடமாடும் மண், நீர் பரிசோதனை முகாம் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்

ADDED : மார் 04, 2025 06:14 AM
ராசிபுரம்: 'வெண்ணந்துாரில் வரும், 26ல் மண், நீர் பரிசோதனை முகாம் நடக்கிறது. இதை விவசாயிகள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செங்-கோடை தலைமையிடமாக கொண்டு, வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம், கிராமங்களுக்கே நேரடியாக சென்று விவசாயிகளிடமி-ருந்து மண், நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து, மண் வள அட்டையை அன்றைய தினமே வழங்குகிறது. 2024--25ம் ஆண்டில், மார்ச் மாதத்திற்கு கீழ்காணும் விபரப்படி, சிறப்பு மண்பரிசோதனை முகாம் நடக்க உள்ளது.
அதன்படி, நாளை, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் அமானி, 12ல் எலச்சிபாளையம், தொண்டிப்பட்டி, 19ல் பரமத்தி வேலுார், பிள்ளைக்களத்துாரில், மனு நீதி நாள் முகாமிலும், 26ல் வெண்-ணந்துார் பழந்தின்னிப்பட்டியிலும், காலை, 9:00 மணிக்கு முகாம் நடக்கிறது. இதை விவசாயிகள் தவறாமல் பயன்படுத்திக்-கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.