/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பூசாரியை தாக்கி 'வாட்ஸ் ஆப்பில்' கொலை மிரட்டல் போலீஸ் ஸ்டேஷனை மக்கள் முற்றுகை
/
பூசாரியை தாக்கி 'வாட்ஸ் ஆப்பில்' கொலை மிரட்டல் போலீஸ் ஸ்டேஷனை மக்கள் முற்றுகை
பூசாரியை தாக்கி 'வாட்ஸ் ஆப்பில்' கொலை மிரட்டல் போலீஸ் ஸ்டேஷனை மக்கள் முற்றுகை
பூசாரியை தாக்கி 'வாட்ஸ் ஆப்பில்' கொலை மிரட்டல் போலீஸ் ஸ்டேஷனை மக்கள் முற்றுகை
ADDED : மார் 04, 2025 06:17 AM
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே தாக்கிய கும்பல் மீது புகார் கொடுத்த கோவில் பூசாரிக்கு, வாட்ஸ் ஆப்பில் கொலை மிரட்டல் விடுத்த கும்பலை கைது செய்யக்கோரி, நுாற்றுக்கும் மேற்-பட்டோர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே புதுப்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் பூசாரியாக, 30 ஆண்டு-களாக வேலுசாமி, 56, உள்ளார். கடந்த மாதம், 28ல், கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சக்தி, அஜீத், மூர்த்தி, ரத்தின
வேல் குடிபோதையில் சென்று ஆபாச வார்த்தை-களால் திட்டியுள்ளனர். தான் கொண்டு சென்ற குக்கர் மூடியால் சக்தி தாக்கியதில், வேலுசாமி பலத்த காயமடைந்தார். அவர் புகார்படி கடந்த, 1ல் கொங்கணாபுரம் போலீசார் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யவில்லை. இந்நிலையில் நான்கு பேரும், வாட்ஸ் ஆப்பில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதையடுத்து வேலுசாமி, அவரது மனைவி, ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்பட நுாற்றுக்கும் மேற்-பட்டோர், கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர். எஸ்.ஐ.,க்கள் ஈஸ்வரமூர்த்தி, ஆர்த்தி பேச்சு-வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நான்கு பேரையும் கைது செய்யக்கூறி, போலீஸ் ஸ்டேஷன் எதிரே, கொங்கணாபுரம்-சங்ககிரி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்-டனர். சமாதானப்படுத்திய போலீசார், இரண்டு நாளில் கைது செய்வோம் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.