/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'அட்மா' திட்ட பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முதல்வருக்கு மனு
/
'அட்மா' திட்ட பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முதல்வருக்கு மனு
'அட்மா' திட்ட பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முதல்வருக்கு மனு
'அட்மா' திட்ட பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முதல்வருக்கு மனு
ADDED : செப் 10, 2024 06:10 AM
நாமக்கல்: 'வேளாண் துறையின் அட்மா திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்-களுக்கு, மத்திய அரசு வழங்கிய சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும்' என, சங்க மாநில தலைவர் மனோகர், தமிழக முதல்-வருக்கு மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக வேளாண் துறையில் அட்மா திட்டத்தில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு தொழில்-நுட்ப மேலாளர், 2 உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் என, சென்னை நீங்கலாக, தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரங்க-ளிலும், 1,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள், 2012 மார்ச் முதல், மிகக்குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்-றனர். 2014 முதல், மத்திய அரசு திட்டமான இதற்கு, ஊழியர்க-ளுக்கு
சம்பள உயர்வு வழங்கியது. ஆனால், மாநில அரசு அதை ஊழியர்களுக்கு வழங்காமல், தமிழக அரசின் வேளாண் துறை வேறு திட்டத்திற்கு அந்த நிதியை பயன்படுத்திக் கொண்டது.அரசு உத்தரவு மூலம், 24 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கிய சம்பள உயர்வை, வேறு திட்டத்திற்கு மாநில அரசு மாற்றிக்-கொண்டது. இதை எதிர்த்து ஒப்பந்த பணியாளர்கள், 565 பேர் வழக்கு தொடுத்து பணியாளருக்கு
சாதகமான தீர்ப்பை பெற்றனர். அதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதிலும் இடைக்கால உத்தரவாக அட்மா திட்டம் இருக்கும் வரை தொடர்ந்து இடைநிறுத்தாமல் பணி வழங்கவும் உத்தரவிட்டது.அரசு, 2018ல் மேல்முறையீடு செய்தது. இதை காரணம் காட்டி வழக்கு நிலுவையில் இருப்பதால், அட்மா திட்ட பணியாளர்க-ளுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய சம்பள உயர்வை இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
ஆனால், நீதிமன்ற வழக்கு சம்பள உயர்வு சம்பந்தமானது அல்ல சம்பள உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க மாநில அரசு தடை உத்தரவு எதுவும் பெறவில்லை. இருப்பினும், அட்மா பணியாளர்களை வஞ்சிக்கும் நோக்கில்
தமிழக அரசு செயல்படுகிறது. 2012 முதல், 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மிகக் குறைந்து சம்பளத்தில் பணி செய்து வருகின்றனர்.இத்திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு, பேறு கால விடுப்பு கிடையாது. ஒரு நாள் கூட தற்செயல் விடுப்பு கிடையாது. தமிழக அரசு பணியாளர் விரோத கொள்கை கொண்டிருப்பது வேதனை-யாக உள்ளது. இதை தமிழக
முதல்வர் கவனித்து, அட்மா பணி-யாளர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த வேண்டும். இவ்-வாறு அதில் கூறப்பட்டுள்ளது.