/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எஸ்.சி.,- எஸ்.டி.,க்கு க்ரீமிலேயர் வராது
/
எஸ்.சி.,- எஸ்.டி.,க்கு க்ரீமிலேயர் வராது
ADDED : ஆக 10, 2024 06:53 AM
'எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர் முறை அமல்படுத்தப்படாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீட்டில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவின-ருக்கு க்ரீமிலேயர் முறையை அமல்படுத்த பரிந்துரைத்தது. இந்த முடிவை அமல்படுத்தக் கூடாது என, லோக்சபா மற்றும் ராஜ்ய-சபா எம்.பி.,க்கள் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்-தித்து வலியுறுத்தினர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின் பேசிய மத்திய அமைச்சர் அஸ்-வினி வைஷ்ணவ் கூறுகையில், “அரசியலமைப்புச் சட்டத்தின்-படி, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்குள் க்ரீமிலேயர் வழங்கு-வது அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது. ஆகையால், அவர்க-ளுக்கு க்ரீமிலேயர் முறையில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை,” என்றார்.

