/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் உள்ள 1.13 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ', ஜிங்க் மாத்திரை வழங்க திட்டம்
/
மாவட்டத்தில் உள்ள 1.13 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ', ஜிங்க் மாத்திரை வழங்க திட்டம்
மாவட்டத்தில் உள்ள 1.13 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ', ஜிங்க் மாத்திரை வழங்க திட்டம்
மாவட்டத்தில் உள்ள 1.13 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ', ஜிங்க் மாத்திரை வழங்க திட்டம்
ADDED : ஜூலை 02, 2024 06:50 AM
நாமக்கல் : ''மாவட்டத்தில் உள்ள, 1.13 லட்சம் குழந்தைகளுக்கு, வைட்-டமின், 'ஏ' மற்றும் ஜிங்க் மாத்திரைகளை வழங்க திட்டமிடப்பட்-டுள்ளது,'' என, நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் மாவட்டம், சிலுவம்பட்டி அங்கன்வாடி மையத்தில், வைட்டமின், 'ஏ' குறைபாடு தடுப்பு முகாம் மற்றும் வயிற்றுப் போக்கு நிறுத்தும் முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை-களில் வயிற்றுப்போக்கால் ஏற்படும் இழப்புகளை முற்றிலுமாக தடுக்க, ஆண்டு தோறும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு, இன்று (நேற்று) தொடங்கி, வரும், 31 வரை ஒரு மாதம் இம்முகாம் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 13,510 குழந்தைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்-தைகள் இதன் பயனாளிகள் ஆவர். கிராம சுகாதாரத்தின் ஆணி வேர் கிராம சுகாதார செவிலியர்கள். அதே போன்று கிராமத்தில் குழந்தைகள் நலனில் முக்கிய பங்காற்றுபவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள். குழந்தைகள் எவ்வித நோய்த்தொற்றும் இல்-லாமல் ஆரோக்கியமாக வளர வேண்டும். குழந்தைகள் பொது-வாக வயிற்றுப்போக்கு மற்றும் சளி நோயால் பாதிக்கப்படுகின்-றனர். இதனை முற்றிலுமாக தடுக்கும் வகையில், உயிர்காக்கும் மருந்துகளான வைட்டமின், 'ஏ' மற்றும் ஜிங்க் மாத்திரைகளை வழங்க, இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.