/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேதி பொருட்களை சட்ட விரோதமாக விற்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
/
வேதி பொருட்களை சட்ட விரோதமாக விற்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
வேதி பொருட்களை சட்ட விரோதமாக விற்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
வேதி பொருட்களை சட்ட விரோதமாக விற்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
ADDED : ஜூலை 07, 2024 01:05 AM
மோகனுார், : 'வேதி பொருட்களை அனுமதித்த அளவை தவிர்த்தும், குறிப்-பிட்ட பயன்பாடுகள் தவிர்த்தும் சட்ட விரோதமாக பயன்படுத்து-வது, விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சட்டப்படி நடவ-டிக்கை மேற்கொள்ளப்படும்' என, கலெக்டர் உமா எச்சரித்தார்.
மோகனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 33 லட்சம் ரூபாய் மதிப்பில், தரைதளத்தில், 814.53 சதுரடி பரப்பளவில், சமையல் அறை, ஹால், கழிவறையுடன் கூடிய படுக்கையறை வசதியுடன், புதிய செவிலியர் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அவற்றை, நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். தொடர்ந்து, பேட்டைப்பாளையம் பகுதியில், 'கனவு இல்லம்' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளை சந்தித்து, அவர்களின் விபரங்களை சரிபார்த்தார்.
தொடர்ந்து, மோகனுார் சர்க்கரை ஆலையில் ஆய்வு மேற்-கொண்டு, 'ஸ்பிரிட்' பயன்படுத்த உரிமங்கள் பெறப்பட்டுள்ள-தையும், அவற்றின் இருப்பு, பயன்பாடு குறித்து ஆய்வு மேற்-கொண்டு, ஆலை பணியாளர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். அப்போது, 'வேதிப்பொருள் திரவங்களை அனுமதிக்கப்பட்ட அளவை தவிர்த்தும், குறிப்பிட்ட பயன்பாடுகள் தவிர்த்தும் சட்ட விரோதமாக பயன்படுத்துவது, விற்பனை செய்வது கண்டறியப்-பட்டால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, கலெக்டர் உமா எச்சரித்தார். டி.ஆர்.ஓ., மல்லிகா, அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.