/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை'
/
'அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை'
'அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை'
'அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை'
ADDED : செப் 07, 2024 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நாமக்கல் கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறையின் கதவு, பூட்டு, சுவற்றில் ஆபாசமான படங்களை வரைந்து, அருவருக்கத்தக்க செயல்களை செய்த, எருமப்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் துரைமுருகன், 25, என்பவர் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.