/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டவுன் பஞ்.,ல் நுாலகம் அமைக்க இடம் தேர்வு பணி தொடக்கம்
/
டவுன் பஞ்.,ல் நுாலகம் அமைக்க இடம் தேர்வு பணி தொடக்கம்
டவுன் பஞ்.,ல் நுாலகம் அமைக்க இடம் தேர்வு பணி தொடக்கம்
டவுன் பஞ்.,ல் நுாலகம் அமைக்க இடம் தேர்வு பணி தொடக்கம்
ADDED : ஜூலை 07, 2024 01:05 AM
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., 18 வார்டுகளில், 30,000க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். டவுன் பஞ்., நுாலகம் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்டிருந்தது. பஸ் ஸ்டாண்ட் விரி-வாக்கத்தின் போது, அந்த நுாலகம் இடிக்கப்பட்டது. சீராப்பள்ளி எல்லையில் உள்ள தனியார் கட்டடத்தில், நுாலகம் இயங்கி வரு-கிறது. அங்கு போதுமான இடவசதி இல்லாததால், புதிய புத்த-கங்களை வாங்குவதும் இல்லை. சரியான பாதுகாப்பு இல்லா-ததால் பழைய புத்தகங்களை முறையாக அடுக்கி வைக்கவும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, நாமகிரிப்பேட்டை நகர் பகுதியில் நுாலகத்திற்கு இடம் ஒதுக்கி கட்டடம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து அரியாக்கவுண்டம்-பட்டி செல்லும் நாமக்கல் சாலையோரம் நுாலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு நுாலகம் கட்ட போது-மான இடம் உள்ளதா என, டவுன் பஞ்., ஊழியர்கள், வருவாய்து-றையினர் சேர்ந்து அளவிடும் பணியில், நேற்று ஈடுபட்டனர்.அரியாகவுண்டம்பட்டி செல்லும் சாலையில் போதுமான இடம் இருந்தால், அதே பகுதியில் நுாலகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அப்படி இல்லை என்றால் வேறு பகுதியில் இடம் தேர்வு செய்யப்படும் என, டவுன் பஞ்., அலுவலர்கள் தெரிவித்தனர்.