/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி
/
டூவீலர் மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி
ADDED : டிச 07, 2024 06:58 AM
மோகனுார்: மோகனுார் அடுத்த எஸ்.வாழவந்தி, கே.ராசாம்பாளையத்தை சேர்ந்த காளியண்ணன் மகன் சந்துரு, 25; மணப்பள்ளி பஞ்., ராம் நகரில் வசித்து வந்தார். லண்டனில் இருந்து, கடந்த, 6 மாதங்க-ளுக்கு முன் சந்துரு சொந்த ஊருக்கு வந்தார். மீண்டும் லண்டன் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று மாலை, 5:30 மணிக்கு, சந்துருவும், கணபதிபாளையத்தை சேர்ந்த நண்பர் நித்திஷ், 24, என்பவரும், பாலப்பட்டியில்
இருந்து மணப்பள்ளி நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்-போது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், சாலையோரம்
இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சந்துரு உயிரிழந்தார். நித்தீஷ், நாமக்கல் தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.