/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதால் ஆர்.ஐ., ஆபீசில் குடியேறிய தொழிலாளி
/
குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதால் ஆர்.ஐ., ஆபீசில் குடியேறிய தொழிலாளி
குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதால் ஆர்.ஐ., ஆபீசில் குடியேறிய தொழிலாளி
குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதால் ஆர்.ஐ., ஆபீசில் குடியேறிய தொழிலாளி
ADDED : ஜூலை 07, 2024 01:04 AM
வெண்ணந்துார் : வெண்ணந்துார் டவுன் பஞ்.,க்குட்பட்ட தங்க சாலை வீதியை சேர்ந்தவர் துரைசாமி, 68. தாய் பாப்பம்மாள், 80. மனைவி கன-காம்பாள், 50. தம்பதியருக்கு சங்கீதா, 37, என்ற மகள், நாகராஜ், 35, உதயகுமார், 30, கண்ணன், 24, என, மூன்று மகன்கள் உள்-ளனர். துரைசாமி கூலி வேலை செய்து வருகிறார்.
துரைசாமிக்கு, கடந்த, 40 ஆண்டுக்கு முன் அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 1-ல் துரைசாமி குடியிருந்த வீட்டை வருவாய் துறையினர் இடித்து அகற்றினர். இதனால் வசிக்க வீடில்லாமல் தவித்த துரை-சாமி, குடும்பத்தினருடன், நேற்று, வெண்ணந்துார் ஆர்.ஐ., அலு-வலகத்தில் குடியேறினார். தகவலறிந்து வந்த போலீசார், துரை-சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால், ஆர்.ஐ., அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்-டது.இதுகுறித்து, துரைசாமி கூறுகையில், ''அரசால் வழங்கப்பட்ட இடத்தில், 40 ஆண்டாக வீடு கட்டி வசித்து வந்தேன். அதற்கு வீட்டு வரி, இதர அரசு வரிகளை முறையாக செலுத்தி வரு-கிறேன். ஆனால், எந்த அறிவிப்பும் இன்றி வீட்டை இடித்ததால், ஆர்.ஐ., அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறினேன். எனக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுப-டுவேன்,'' என்றார்.
ராசிபுரம் தாசில்தார் சரவணன் கூறுகையில், ''அரசால் ஒதுக்கப்-பட்ட இடத்தில் துரைசாமி வீடு கட்டி வசித்து வருகிறார். ஆனால், மற்றொருவர் வீட்டிற்கு செல்லும் பாதையை மறைத்து வீடு கட்டியதால், சம்பந்தப்பட்ட நபர் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் மாநில தாழ்த்-தப்பட்டோர் ஆணையம், பாதையில் உள்ள வீட்டை அகற்ற உத்-தரவு வழங்கியது. இதையடுத்து வீடு முறையாக அறிவிப்பு செய்து இடிக்கப்பட்டது,'' என்றார்.