/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக சமூக நீதி நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு
/
உலக சமூக நீதி நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : மார் 12, 2025 08:09 AM
நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், 'எனது இளைய பாரதம், உலக சமூகநீதி நாள்- - 2025' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கு, நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்து பேசு-கையில், ''நம் பண்டைய கால தமிழ் மரபிலிருந்து சமூக நீதி என்-பது கடைப்பிடிக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு. நம் பண்பாட்டின் அடையாளமாக சமூகநீதி விளங்குகிறது. அனைவரும் சமம் என்-பதையே நம் முன்னோர்கள் வழிகாட்டி உள்ளனர். மாணவியர் சமூகத்தின் ஒற்றுமைக்கு பாடுபட வேண்டும்,'' என்றார்.
நேரு யுவகேந்ரா மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் தில்லை சிவக்குமார் கலந்துகொண்டார். 'மை பாரத்' இணையத-ளத்தில் பதிவு செய்து பங்கேற்ற கல்லுாரி மாணவியர், 70 பேர், 'சமூக நீதி' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினர். தொடர்ந்து, 'உலக சமூக நீதி நாள்' கட்டுரை போட்டியில், முதல், நான்கு இடம் பிடித்த மாணவியருக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.