தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 22, 2024 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2024 12:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சவுந்தரம் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வைரம், மாவட்ட பொதுச்செயலாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணியை சமூக நலத்துறை, வருவாய்த்துறை வசமே ஒப்படைக்க வேண்டும். செவிலியர்களிடம் தாய்சேய் நலப்பணி, தடுப்பூசி பணிகளை வழங்க வேண்டும். ஆண், பெண் பாலின பாகுபாடின்றி முறையான பதவி உயர்வு அளிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கணினி இயக்குபவர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us