ADDED : செப் 17, 2024 07:38 AM
அ நிறம் | அளவு
ராசிபுரம்: தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தன்னார்வலர்கள் அமைப்பு, மாவட்ட நிர்வாகம் மூலம் ஒருங்கிணைந்து, ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து, ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட சாலையோரங்களில் உள்ள புறவழிச்சாலையில், நேற்று பனை விதைகள் நடப்பட்டன.
ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஸ்குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இப்பணி நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
