ADDED : டிச 25, 2024 02:04 AM
அ நிறம் | அளவு
போலி டாக்டர் கைது
பள்ளிப்பாளையம், டிச. 25-
பள்ளிப்பாளையம் அருகே, பாதரையை சேர்ந்தவர் அமிர்தவள்ளி, 39; வெப்படை பஸ் ஸ்டாப் பகுதியில், கடந்த, 2 ஆண்டாக கிளீனிக் நடத்தி வருகிறார். இவர் நர்சிங் பயிற்சி முடித்து விட்டு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி, வெப்படை போலீசில் புகாரளித்தார். இதையடுத்து வெப்படை போலீசார் வழக்குப்பதிந்து, போலி டாக்டர் அமிர்தவள்ளியை, நேற்று கைது செய்தனர்.
