ADDED : ஜன 22, 2025 01:22 AM
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ராசிபுரம், :'தேசிய சாலை பாதுகாப்பு' மாதத்தை முன்னிட்டு, ராசிபுரம் அடுத்த ஆன்டகலுார்கேட் அரசு கலைக்கல்லுாரி மாணவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செஞ்சிலுவை சங்க மாணவர்கள், ஏற்பாடுகளை செய்திருந்தனர். கல்லுாரி முதல்வர் பானுமதி தலைமை வகித்தார்.
சாலை விபத்துகளின் புள்ளி விபரம், சாலை விபத்துகளுக்கான காரணம், சாலை விதிக்களுக்கான அபராதம், இளைஞர்கள் எவ்வாறு சாலையில் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு டிரைவர் லைசென்ஸ் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோட்டப்பொறியாளர் குமுதா, உதவி கோட்டப்பொறியாளர் சுப்ரமணி உள்ளிட்டோர் மாணவர்களிடம் பேசினர். கல்லுாரி பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜெகதீஸ்குமார், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.