/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விபத்தில் மனைவி பலிகணவன் படுகாயம்
/
விபத்தில் மனைவி பலிகணவன் படுகாயம்
ADDED : பிப் 15, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்தில் மனைவி பலிகணவன் படுகாயம்
சேந்தமங்கலம்:எருமப்பட்டி யூனியன், கஸ்துாரிப்பட்டி புதுாரை சேர்ந்தவர் முருகேசன் மனைவி ராசாத்தி, 45; கணவன், மனைவி இருவரும், கடந்த, 13ல், டூவீலரில், எருமப்பட்டியில் இருந்து முட்டாஞ்செட்டி அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது, பால் ஏற்றி வந்த லாரி, தம்பதியரின் டூவீலர் மீது மோதியது. இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், ராசாத்தி உயிரிழந்தார். முருகேசன் சிகிச்சை பெற்று வருகிறார். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.