/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 20, 2025 01:29 AM
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்:தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பசுமை பள்ளிகள் திட்டத்தின் கீழ், 2023-2024ம் ஆண்டில், நாமக்கல் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்ததில், சிறந்த சூழல் பள்ளியாக நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது.
இதையொட்டி, அப்பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், தலைமையாசிரியர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில், பூச்சிக்கொல்லியை தவிர்ப்போம்; பூவனங்களை காப்போம்; புவியின் நோய்க்கு மரங்களே மருந்து; இயற்கையை உரமிட்டு இன்பமாக வாழ்வோம்; ரசாயண உரங்களை தவிர்ப்போம்; மண் வளத்தைக் காப்போம்; மண்ணரிப்பை தடுப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

