/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருப்பாற்குளத்தை சீரமைக்க கோரிக்கை
/
திருப்பாற்குளத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : பிப் 28, 2025 01:46 AM
திருப்பாற்குளத்தை சீரமைக்க கோரிக்கை
நாமக்கல்:'பராமரிப்பின்றி, புதர் மண்டி காணப்படும் திருப்பாற்குளத்தை சீரமைப்பு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற நாமகிரி தாயார் கோவில் உள்ள. இக்கோவில் அருகே, திருப்பாற்குளம் உள்ளது. அந்த குளம் பயன்பாடின்றி சேரும், சகதியுமாக காணப்பட்டது. இந்நிலையில், 2014-15ல், அப்போதைய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பாஸ்கர் முயற்சியில், புனரமைக்கப்பட்டது. இதற்காக, குளத்தில் இருந்த சேறும், சகதியும் அப்புறப்படுத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டது. இதையடுத்து, அங்கு பூங்கா அமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே ஆட்சி மாற்றம் காரணமாக, பூங்கா முறையாக பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, புதர் மண்டியும், மக்கள் பயன்பாடின்றி, பூட்டிக்கிடக்கிறது. இது, அப்பகுதி பொதுமக்களை கடும் அதிர்ச்சியும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
'நாமக்கல் நகராட்சியாக இருந்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகரின் மையத்தில் அமைந்துள்ள திருப்பாற்குளத்தை முறையாக பராமரித்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.