ADDED : மார் 01, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளியில்வெள்ளி விழா
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, தர்மதோப்பு, வாசுகி நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின், 25வது ஆண்டை வெள்ளி விழாவாக கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியை நாகரத்தினம் தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் குமரேசன், நிர்வாகிகள் பாலு, முருகன், சண்முகம், பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர். ஆசிரியர், ஆசிரியை, சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பின், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.