தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்


ADDED : மார் 03, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இலவச கண் சிகிச்சை முகாம்

ப.வேலுார்:-ப.வேலுார் அரிமா சங்கம் சார்பில், பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம், நேற்று நடந்தது. முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை நடந்தது. கண்புரை உள்ள நோயாளிகள், 87 பேர், இலவச சிகிச்சைக்கு, சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். புற நோயாளிகளாக, 202 பேர் சிகிச்சை பெற்றனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனுார், பரமத்தி, வெங்கரை, இடையாறு, ப.வேலுார் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், இலவச சிகிச்சை பெற்றனர். ப.வேலுார் அரிமா சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் சாமிநாதன், தேவராஜ், பொருளாளர் அரசகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us