தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தமிழகம், கேரளாவில்முட்டை விலை உயர்வு

தமிழகம், கேரளாவில்முட்டை விலை உயர்வு

தமிழகம், கேரளாவில்முட்டை விலை உயர்வு


ADDED : மார் 19, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம், கேரளாவில்முட்டை விலை உயர்வு

நாமக்கல்:நாமக்கல் லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.

இதையடுத்து, 400 காசுக்கு விற்ற முட்டை விலை, 10 காசு உயர்த்தி, 410 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.முட்டை கொள்முதல் விலை, தொடர்ந்து, அதிகரித்து வருகிறது. 3 நாட்களில், 30 காசு உயர்ந்துள்ளது. நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 430, ஐதராபாத், 405, விஜயவாடா, 430, பர்வாலா, 382, மும்பை, 465, மைசூரு, 455, பெங்களூரு, 455, கோல்கட்டா, 475, டில்லி, 400 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 65 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையிலும், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 106 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us