ADDED : மார் 23, 2025 01:25 AM
அ நிறம் | அளவு
தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
குமாரபாளையம்:குமாரபாளையத்தில், தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி, திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கள்ளிப்பாளையம் சிவன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில் உள்ளிட்ட பல சிவன் கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
