/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுமியை கர்ப்பமாக்கிய பெயின்டருக்கு போக்சோ
/
சிறுமியை கர்ப்பமாக்கிய பெயின்டருக்கு போக்சோ
ADDED : மார் 30, 2025 01:27 AM
சிறுமியை கர்ப்பமாக்கிய பெயின்டருக்கு போக்சோ
ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த பட்டணம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வன் மகன் பாரதிராஜா, 22; பெயின்டர்; அதே பகுதியை சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவரிடம் ஆசைவார்த்தை கூறிய பாரதிராஜா, பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்தார்.
இரண்டு தினங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லை என, சிறுமியை அவரது பாட்டி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த சிறுமியின் பாட்டி அளித்த புகார்படி, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார், பாரதிராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.