/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளியம்மன் கோவிலில்பஞ்சமி திதி வழிபாடு
/
காளியம்மன் கோவிலில்பஞ்சமி திதி வழிபாடு
ADDED : ஏப் 04, 2025 01:10 AM
காளியம்மன் கோவிலில்பஞ்சமி திதி வழிபாடு
ராசிபுரம்:ராசிபுரம் ரயில் நிலையம் அருகில் உள்ள, காளியம்மன் கோவிலில் பங்குனி மாத பஞ்சமி திதி வழிபாடு நடந்தது. ராசிபுரம் ரயில் நிலையம் அருகில் காளியம்மன் கோவிலில், ஞான வராஹி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதியன்று அபிஷேகம் நடைபெறும். நேற்று முன்தினம் இரவு, பங்குனி மாத வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு, உற்சவர் ஞான வராஹி அம்மனுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சிறப்பு அலங்காரம், மலர்களால் அர்ச்சனை செய்த பின், பஞ்சதீபம் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.